திங்கள், 15 டிசம்பர் 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

வைட்டமின் ‘சி’ அதிக அளவு நிறைந்த கொய்யாப் பழம்

வைட்டமின் ‘சி’ அதிக அளவு நிறைந்த கொய்யாப் பழம்
நோய் எதிர்ப்புத் திறனை அதிகப் படுத்த உணவில் அதிக அளவில் பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செர்க்கப்படும் பழங்களில் முக்கியமான இடத்தினைப் பிடிப்பது கொய்யாப் பழம்.
கொய்யாப் பழம் வைட்டமின் ‘சி’ அதிக அளவு நிறைந்துள்ளது. வைட்டமின் ‘சி’ நோய் எதிர்ப்புத் திறனை அதிரிப்பதுடன் சாதாரணமான நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகளின் தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.
 
கொய்யாப் பழம் சாப்பிடுவதனால் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் இவற்றில் லைக்கோபீனே நிறைந்துள்ளதால் மார்பகப் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகிறது.
 
கொய்யாப் பழத்தில் நார்ச்சத்தினை உள்ளடக்கி உள்ளதால் சர்க்கரையின் அளவு நன்கு ஒழுங்கு படுத்தப்படுகிறது. எனவே நீரிழிவு நோயினால் பதிக்கப் பட்டவர்களுக்குக் கொய்யாப் பழம் சிறந்த உணவாக இருக்கும்.
வைட்டமின் ‘சி’ அதிக அளவு நிறைந்த கொய்யாப் பழம்
கொய்யாக் காய் அல்லது கொய்யா இலையிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றினை தோலில் பூசி வரத் தோற்றம் மேம்படுவைதைக் காணலாம்.