1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

உடலின் பல்வேறு பிரச்சினைகளை போக்கும் மருத்துவகுணம் நிறைந்த ஓமம்...!

ஓமத்தில் உள்ள மருத்துவ குணங்கள் உடலின் பல்வேறு பிரச்சினைகளை போக்கும் ஆற்றல் வாய்ந்தது. ஓமத்தில் மாவுப்பொருட்கள், புரோட்டீன், வைட்டமின்கள் குறிப்பாக கரோட்டின், தயாமின், நிக்கோடினிக் அமிலம் மற்றும் கனிமச் சத்துகளான இரும்புச்சத்தும், கால்சியமும்  அதிக அளவில் நிறைந்துள்ளன.
ஓமம் பல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. குறிப்பாக தொப்பையை குறைக்க ஓமம் உதவி செய்கிறது. தினமும் இரவில் ஒரு  அன்னாசி பழத்துடன் ஓமப்பொடி இரண்டு ஸ்பூன் போட்டு இவை இரண்டையும் சேர்த்து கொதிக்க வைத்து, மறுநாள் காலையில், அந்த  கலவையை நன்றாக கரைத்து குடிக்க வேண்டும். இதேபோன்று 15 நாட்களுக்கு தொடர்ந்து செய்து வந்தால் தொப்பை வேகமாக  குறைந்துவிடும்.
 
ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் ஆற்றல் ஓமத்திற்கு உண்டு. ஓமத்தை கசாயம் செய்து தொடர்ந்து குடித்து வந்தால் ஆஸ்துமா நோயில்  இருந்து எளிதில் விடுபடலாம்.
 
சீரகம் மற்றும் ஓமத்தையும் நன்றாக வறுத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்து, தினமும் சாப்பிட்ட பிறகு 20 நிமிடங்கள் கழித்து  ஒரு ஸ்பூன் கலவையை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் வயிறு கோளாறு மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் தீரும்.
 
ஓமம் மூட்டுவலிக்கு சிறந்த தீர்வைத் தருகிறது. நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் என கேட்டால் கிடைக்கும் எண்ணை வாங்கி  மூட்டு வலி ஏற்படும் போது தடவினால் அதே போன்று தொடர்ந்து தடவி வந்தால் மூட்டுவலி குணமாகும்.
 
சிறிதளவு ஓமப்பொடி மற்றும் சிறிதளவு உப்பு இரண்டையும் மோரில் கலந்து குடித்தால் நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும்.
 
பல் வலிகளுக்கு ஓமம் சிறந்த நிவாரணியாக இருக்கிறது. பல் வலிக்கு ஓம எண்ணெய் மருந்தாக உதவுகிறது. பல் வலி இருக்கும் போது இந்த எண்ணெய் பஞ்சில் நனைத்து வலிக்கும் பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால் பல்வலி குறையும்.
 
வாயுத்தொல்லையை ஓமத்தை கொண்டு சரி செய்யலாம். ஓமம், கடுக்காய் தோல் மற்றும் சுக்கு இவை அனைத்தையும் எடுத்து நன்றாகத் தூளாக்கி சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இதில் அரை தேக்கரண்டி அளவு ஒரு டம்ளர் மோருடன் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள  வாயு உடனே சரியாகும்.