புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பற்களில் ஏற்படும் கறைகளை நீக்க இயற்கை மருத்துவ குறிப்புகள்!!

கொய்யா பழம், ஸ்ட்ராபெரி பழம் உண்பதால் பற்களில் உள்ள கறை நீங்கும். கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து ,அந்த நீரை கொப்பளித்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.

* இரவு தூங்குவதற்கு முன்பு, ஆரஞ்சு பழ மேல் தோலைபற்களில் தேய்த்து விட்டு படுத்து, மறுநாள் காலை எழுந்தவுடன் நீர் விட்டுக் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது பற்களின் மேலும், பற்களின் உட்புறத்தில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.
 
* வெள்ளை எள்ளு விதையை, நன்றாக தூளாக்கி பற்க்களின் மேல் தேய்த்து வந்தால், பற்களின் மேல் உள்ள கறைகள் நீங்கும். பேக்கிங் சோடா , கல் உப்பு  இரண்டையும் ஒன்றாக கலந்து பற்களின் மீது தேய்த்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.
 
* மிக முக்கியமாக உணவை நன்றாக ,மென்று, அரைத்து, விழுங்க வேண்டும். கிராம்பு பொடியுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து வைத்து மிதமான சுடுநீரில் கலந்து வாய் கொப்பளித்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.
 
* அன்றாட உணவில் கேரட், பேரிக்காய், ஆப்பிள், அத்திப்பழம் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவு உறங்கும் முன்  பல் துலக்குவது அவசியமான ஒன்றாகும் .இவை பற்களில் உள்ள கறைகளை நீக்க துணைபுரியும்.