திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

தட்டையான வயிற்றை பெற இப்படி செய்தால் போதும்....!

வயிற்றில் தொப்பை மட்டும் குறையவில்லை என்ற கவலை இருக்கும். இப்படி செய்தால்போதும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நீரினை எடுத்து, அதில் ஒரு அன்னாசிப் பழத்தை துண்டுகளாக்கி போடுங்கள். அதனுடன் ஓமப் பொடி 4 ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து கொதிக்க விடுங்கள்.
நன்றாக அன்னாசி வெந்ததும் அடுப்பை நிறித்திவிட்டு அந்த நீரினை இரவு முழுவதும் அப்படியே விடுங்கள். காலை அந்த நீரினை வடிகட்டி குடிக்க வேண்டும். இவ்வாறு 10 நாட்கள் செய்தால், தொப்பை குறைத்து ஸ்லிம்மாகிவிடும்.
 
பித்தத்தை தணிக்க தேவையான வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் அனைத்தையும் கொண்டு உள்ளது. தினம் சாப்பிட உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து நம்மை பராமரிக்கும்.
 
நோய் தொற்றுகளுடம் இருந்து நம்மை பாதுகாத்து எலும்புகளுக்கு தேவையான கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்களை கொடுத்து வலிமை பெற  செய்கிறது.
 
ரத்த குறைபாடுகளால் ஏற்படும் அனைத்து கோளாறுகளுக்கும் அன்னாசி பழத்தில் இருக்கும் சத்துக்களை கொண்டு பூர்த்தி செய்யலாம். வைட்டமின் பி அதிகம் காணப்படுவதால் பெண்கள் அதிகம் எடுத்து கொள்ள உடல் ஆரோக்கியம் பெற்று பல வியாதிகளிடம் இருந்து தற்காத்து கொள்ளலாம்.
 
அன்னாசி பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதனை பாலுடன் சேர்த்து நன்கு ஊறிய பிறகு குடிக்க வேண்டும். இதனை தினம் குடித்து வந்தால் நோய்கள்  நம்மை அணுகாது.