செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

நிலக்கடலை சாப்பிடுவதால் இத்தனை பயன்கள் உண்டா...!

நிலக்கடலையில் உள்ள தாமிரச்சத்து நமது உடலில் எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொழுப்பை குறைத்து, நன்மை செய்யும் எச்.டி.எல். கொழுப்பை  அதிகப்படுத்துகிறது.
நிலக்கடலையில் உள்ள பாலிபீனால்ஸ் என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் நோய் வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் உதவுகிறது.
 
நிலக்கடலையில் உள்ள சத்து ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது.* *குறிப்பாக, நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகளவு உள்ளது. ஆகவே, பெண்கள் தினமும் 400 கிராம் என்ற அளவில் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால், கருவுறும் வாய்ப்பு அதிகரிக்கும்.
 
நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாகுவதை தடுக்க முடியும். 20 ஆண்டு தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில்,  25 சதவிகிதம் பித்தப்பை கல் உருவாகும் வாய்ப்பு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.
 
குறிப்பாக,பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு எலும்பு தொடர்பான நோய் வராமல் காத்துக் கொள்ளலாம்.