செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தாமரை வேரில் உள்ள சத்துக்களும் அதன் பயன்பாடுகளும்...!!

தாமரை வேர்களில் அதிக அளவில் இருக்கும் வைட்டமின்கள் பி மற்றும் சி சத்து தோல் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. 
 

வைட்டமின் சி உடலின் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுகிறது, இது சருமத்தின் உறுதியை அதிகரிக்கிறது. தாமரை வேர்களில் அதிகப்படியாக இருக்கும்  பொட்டாசியம் அதிகப்படியான சோடியத்தை உறிஞ்சி சிறுநீரின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
 
தாமரை வேர்கள் வைட்டமின் பி சத்தை கொண்டுள்ளன. தாமரை வேர்களில் குறிப்பிடத்தக்க அளவு பொட்டாசியம் இருப்பது உடலில் உள்ள திரவங்களுக்கு  இடையில் சமநிலையை ஏற்படுத்துகிறது மற்றும் அதிகப்படியான சோடியம் இரத்த ஓட்டத்தை பாதிக்காமல் தடுக்கிறது. 
 
இது இரத்த நாளங்களை தளர்த்தி சுருக்கம் மற்றும் விறைப்பை தடுக்கிறது. மேலும் தாமரை வேர்களில் இருக்கும் இரும்பு சத்து மென்மையான இரத்த ஓட்டத்திற்கு  உதவுகிறது.
 
நீர்வாழ் தாவரமான தாமரை மலர் சமையல் பயன்பாட்டிற்கு உதவுகிறது. இதன் மலர் மட்டுமல்ல, வேர்கள், தண்டு மற்றும் விதைகள் போன்றவை சமைக்க  பயன்படுத்தப்படுகின்றன.