1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் இயற்கை வைத்தியம்

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் இயற்கை வைத்தியம்

முடியின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் அதிகரிக்க சிறந்த வழி, அது வாரம் ஒருமுறை தவறாமல் சூடான எண்ணெய் கொண்டு தலைமுடி மயிர்கால்களை மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிக்க வேண்டும்.


 
 
முட்டையின் வெள்ளைக்கருவிற்கு பாதிப்படைந்த மயிர்கால்களை சரிசெய்யும் குணம் உடையது. மேலும் முடியை மென்மையாகவும், பொலிவோடும் வெளிக்காட்டும்.
 
தலைக்கு குளித்த பின்னர், முடியை உலர வைக்க பலர் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்துவதால் முடியின் ஆரோக்கியமானது பாதிக்கப்படும்.
 
முடிக்கு புரோட்டீன் மிகவும் அவசியமானது. அத்தகைய புரோட்டீன் முட்டையில் மட்டுமின்றி, உருளைக்கிழங்கிலும் உள்ளது. அதற்கு உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீரைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை அலசுங்கள்.
 
கண்டிஷனரானது ஸ்கல்பில் பட்டால், அது முடியின் வளர்ச்சிக்கு பெரும் பதிப்பை ஏற்படுத்தும். ஆகவே முடியின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே கெமிக்கல் கலந்த கண்டிஷனர் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கையாக கிடைக்ககூடிய தயிரைப் பயன்படுத்துங்கள். இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. முடியும் ஆரோக்கியமாக இருக்கும்.