வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையும் மருத்துவப் பலன்களும்...!

கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசிய மான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது. இதில் வைட்டமின் சி, பி ஆகிய உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன.

கர்ப்பத்தில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும், முதல் ட்ரைமெஸ்டரின் போதான குழந்தையின் நரம்புக் குழாய்களின் வளர்ச்சிக்கும் இந்த ஃபோலிக்  அமிலமானது மிகவும் அவசியம்.
 
வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி. இது ஒரு சத்துள்ள உணவு. ஆனால் பிஞ்சுக் காயாகப் பார்த்து வாங்கிச் சமைக்க வேண்டும். இதனுடன்  சீரகம் சேர்த்துச் சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். 
 
வெண்டைக்காயில் அதன் வழவழப்புத் தன்மையில்தான், அத்தனை மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளன. இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு அருமருந்து. தவிர, மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும்  குணப்படுத்தக்கூடியது.
 
வெண்டைக்காயை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.
 
வெண்டைக்காய் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்தைக் குறைக்கிறது. தவிர, இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், புற்றுநோய்க்குக் காரணமான செல்களின் வளர்ச்சியையும் தவிர்க்கக் கூடியது.
 
வெண்டைக்காய் உணவு விந்துவைக் கட்டிப் போகத்தில் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் சிலவற்றை தினந்தோறும்  பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும்.