திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (14:01 IST)

பல்வேறு நோய்களுக்கு சிறந்த மருந்தாகும் தொட்டால் சிணுங்கி மூலிகை !!

Thotta Chinungi
தொட்டால்  சுருங்கி தோல் வியாதிகள், குழந்தை பேறு பிரச்சனை, ஆண்மை குறைபாடு போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. தொட்டால் சுருங்கி இலை மற்றும் அதன் வேரினை நன்கு உலர்த்தி சூரணம் செய்து வைத்துக்கொள்ளவும். அந்த சூரணத்துடன் பசும்பால் சேர்த்து கொடுப்பதன் மூலமாக மூல நோய் குணமடையும்.


ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் பதினைந்து கிராம் கலந்து சாப்பிட வேண்டும். தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும்.

சூட்டினால் சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை பத்து கிராம் அளவு காலை தயிரில் சாப்பிட வேண்டும். இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சை அளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட்டு வர வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

புண் குணமாக இவ்விலையைப் பறித்து வந்து சுத்தம் செய்து, உள்ளங்கையில் வைத்துக் கசக்கி, அதில் இருந்து வரும் சாற்றை உடலில் ஏற்பட்டுள்ள குழிப்புண்ணில் விடுவதோடு கொஞ்சம் இலையையும் அந்தப்புண்ணின் மீது கசக்கி வைத்து தூய்மையான துணியால் கட்டி வந்தால் சில நாட்களிலேயே குழிப்புண் குணமாகும்.

மேனியில் ஏற்படும் படை, தேமல் போன்ற நோய்கள் நீண்ட நாள் இருந்து தொல்லை கொடுக்கும் வேளையில் இவ்விலையைப் பறித்து வந்து, அதில் சாறு எடுத்து அதை நோய் மீது தடவ விரைவில் குணமாகும்.