வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!!

தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுபவர்களுக்கு அஜரணக் கோளாறு ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலே நோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம்.
வயது ஆக ஆக எல்லோருக்கும் கண்பார்வை குறையத் தொடங்கிவிடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள், தினமும் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை படிப்படியாக தெளிவடையும்.
 
உடலில் ஏற்படும் ஒரு சிறிய அளவு வைட்டமின் சி குறைபாடு கூட தொற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும் என்று சில ஆராய்ச்சி  முடிவுகள் கூறுகின்றன.
 
செவ்வாழையில் இரும்புச் சத்து சுண்ணாம்புச்சத்து மற்றும் உயிர்ச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இதனை குழந்தைப்பேறு வேண்டும் தம்பதியினர் அனுதினமும் உண்டு வந்தால் உடலில் உயிர் அணுக்கள் போதுமான அளவில் உற்பத்தி ஆகி கருத்தரிக்கும் வாய்ப்பினை  உருவாக்கும்.
 
கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
 
பல் வலி, பல்லசைவு போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். நெஞ்செரிச்சலால் கஷ்டப்படுபவர்கள் தினமும் செவ்வாழையை உட்கொண்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.
 
செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாவது, இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலைத் தடுக்கும்.
 
செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு. எனவே எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் ஒரு செவ்வாழையை காலையில் உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் எடுக்காமல் இருக்கும்.