புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 11 ஜனவரி 2022 (15:41 IST)

திருநீற்றுப்பச்சிலை மூலிகையின் அற்புத மருத்துவகுணங்கள் !!

திருநீற்றுப்பச்சிலை, கற்பூரவள்ளி, மஞ்சள் கரிசாலை, மிளகு, திப்பிலி இவற்றை சேர்த்து, அரைத்து சிறு மாத்திரைகளாக்கி, உட்கொண்டு வர தொண்டை சதை வளர்ச்சி கரையும்.

திருநீற்றுப்பச்சிலை அரைத்து பாலில் கலந்து குடித்து வர புத்திக்கூர்மை உண்டாகும். மேலும் வாந்தியை நிறுத்தும்.
 
திருநீற்றுப்பச்சிலையை அரைத்து சாறு பிழிந்து பதினைந்து மில்லி குடித்துவர கபம், மூச்சு வாங்குதல், சன்னி போன்றவை குணமாகும்.
 
திருநீற்றுப்பச்சிலை விதைகளை நீரில் ஊற வைத்து குடித்து வர வயிற்று இரைச்சல் குணமாகும். பச்சிலை விதையை கசாயம் செய்து குடித்து வந்தால்சுறுசுறுப்பு கிடைப்பதோடு மூத்திரக்கோளாறுகள் சரியாகும்.
 
திருநீற்றுப்பச்சிலை விதையை சப்ஜா விதை என்பார்கள். இதில் செய்த சர்பத்தை குடித்து வந்தால் சீதபேதி, வெள்ளை, வெட்டைச்சூடு, இருமல் சரியாகும்.
 
அரிசியில் திருநீற்றுப் பச்சிலையை கலந்து சாதம் வடித்து, எட்டு மணிநேரம் கழித்து சாப்பிடவும். இதனை தொடர்ந்து செய்து வர நாலு நாட்களில் உடல் சூடு தணியும்.
 
திருநீற்றுப் பச்சிலையை நன்றாக சாறு பிழிந்து அதில் மிளகு இலவங்க பொடி சேர்த்து, உட்கொள்ள நாவறட்சி தீரும்.