வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 17 டிசம்பர் 2021 (10:17 IST)

தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !!

பேரிச்சம் பழத்தில் கொழுப்புகள் மிகவும் குறைவு. மேலும் பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி5, ஏ1, சி போன்றவையும் புரோட்டீன், நார்ச்சத்து போன்றவையும் வளமாக நிறைந்துள்ளது.

பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம், கால்சியம் பாஸ்பரஸ் போன்ற மூல பொருட்கள் அதிகம் இருக்கின்றன. இது மனிதர்களின் உடலின் எலும்புகளின் தேய்மானத்தை குறைக்கிறது. மேலும் எலும்புகளுக்கு உறுதித் தன்மையையும் அளிக்கிறது. 
 
தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
 
பேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுடன், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் உள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடுகளை ஆரோக்கியமாக்கி செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
 
பேரிச்சம் பழம் உடலின் ஆற்றலை மேம்படுத்தும். ஏனெனில் இதில் இயற்கை சர்க்கரைகளான குளுக்கோஸ் சுக்ரோஸ் மற்றும் ப்ருக்டோஸ் போன்றவை நிறைந்துள்ளன. அதிலும் தினமும் பேரிச்சம் பழத்தை பாலுடன் சேர்த்து உட்கொண்டு வந்தால், உடலின் சோம்பேறித்தனம் நீக்கப்பட்டு, உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.
 
பேரிச்சம் பழத்தில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், இதனை உட்கொண்டால், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
 
பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் உள்ளதால், அதனை அன்றாடம் ஆண்கள் உட்கொண்டு வந்தால், அவர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறையும்.