செவ்வாய், 2 ஜூலை 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (18:07 IST)

ஏராளமான தாதுச்சத்துகளை தன்னுள்ளே கொண்டுள்ள கரும்பு சாறு !!

Sugar Cane Juice
கரும்பு ஏராளமான தாது சத்துகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. கரும்பு சாறு பருகும் நபருக்கு உடலில் சீக்கிரத்திலேயே புத்துணர்ச்சியும், உற்சாகமும் தருகிறது.


கரும்பு சாற்றில் உள்ள பொட்டாசியம் வயிற்றின் அமில சுரப்பு அளவுகளை சமன்செய்ய உதவுகிறது மற்றும் செரிமான சாறுகள் சுரக்கவும் உதவுகிறது.

கரும்பு சாறு நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைப்பதாக அறியப்படுகிறது. தினமும் காலையில் கரும்பு சாறு அருந்தும் நபர்களுக்கு உடலில் கொழுப்பு கரைந்து வெகு சீக்கிரத்தில் உடல் எடை குறைய செய்கிறது.

அவ்வப்போது கரும்பு சாறு பருகும் நபர்களுக்கு இதயத்திற்கு ஏற்படும் அழுத்தங்கள் நீங்கி, இதய பாதிப்பு, மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்க படுகிறது.

கரும்பை சாப்பிட்டு அதன் அதன் சாற்றை நாம் பருகுவதால் மூளையின் செயல்பாடு அதிகரித்து சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள கரும்பு பெரிதும் உதவுகிறது.

அடிக்கடி கரும்பு சாறு பருகினால் உடல் மற்றும் மனம் மிகுந்த உற்சகமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கும்.