வியாழன், 28 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

உடல்நலம் காக்கும் சில பயனுள்ள வீட்டு வைத்தியம்!!

கொத்தமல்லி செரிமானத்திற்கு உதவுகிறது. இதயத்திற்கு மிகவும் நல்லது. இருமல், காய்ச்சல், செரிமானமின்மை வாந்தி போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது. இவற்றில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் தினமும் உட்கொள்ளும்போது இரத்த  சோகையை தவிர்க்கலாம்.
கொத்தமல்லியை தினமும் உட்கொண்டு வந்தால் குடல் நோய் மற்றும் வயிற்று புண் குணமாகும். இவற்றின் சாற்றை தேமல் உள்ள இடத்தில்  தேய்த்துவர தேமல் சரியாகும்.
 
வாயுவை குறைத்தல் மற்றும் பெருங்குடல் நோயை குணமாக்குதல் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது சோம்பு. கக்குவான் இருமல், நுரையீரல் நோய்களை தடுக்கும். உடலில் வாயு நீக்கி, செரிமானத்தை கொடுக்கும்.
வெந்தயம் நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. மோருடன் சேர்த்து குடிக்கும்போது வயிற்றுப்போக்கை நீக்குகிறது.
 
கடுகில் உள்ள சல்பர், அப்லோ டாக்சின் போன்றவை நச்சுத் தன்மையை நீக்கும். இருமல், நீரிழிவு, பக்கவாதம், தோல் நோய் ஆகியவற்றை  குணப்படுத்துகிறது.
 
வயிற்றுபோக்கு மற்றும் வாயுவை தவிர்க உதவுகிறது. காயங்கள், கொப்புளங்கள் மீது பூண்டை தடவினால் விரைவில் குணமடையும்.
 
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் வீக்கம், கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்கிறது. மூலத்தை குணப்படுத்துகிறது.