செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கண்களை காக்க எளிய வழிகள் !!

டிவி பார்க்கும் போது இருட்டு அறையில் பார்க்காமல் திரைக்கு பின் ஏதேனும் ஒரு ஒலி இருக்கும்படி கவனித்துகொள்ளவும்.

படிக்கும் பொழுது கண்களை மிகவும் அலட்டாமல், கண்கள் சோர்வடையும் வரை நீடித்து படிக்காமல் இருக்கவும். கான்டேக்ட் லென்ஸ் அல்லது கண்ணாடிகளை தேவைக்கு ஏற்ப உபயோகிக்கவும்.
 
கம்ப்யூட்டர் மானிட்டரை கண்பார்வைக் கோட்டிற்கு கீழ் அமையும்படி பார்த்துகொள்ளவும். கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும்போது சிறு சிறு இடைவேளைகள் எடுத்துகொள்வது அவசியம்.
 
கீரை உணவுகளை வாரம் இரண்டுமுறையாவது சாப்பிடுவது அவசியம். மீன் எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் கண்களுக்கு அவசியம்.
 
பலவகையான நிறங்களை கொண்ட இயற்கை உணவுகளை அதிகம் சேர்க்கலாம். முட்டை, வெண்ணெய் வாரம் இரு முறை என சாப்பிடலாம்.