1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 23 ஏப்ரல் 2022 (17:59 IST)

இருதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கும் எள் !!

Sesame
எள் எண்ணெய்யை அதாவது நல்லெண்ணெய்யை 7 நாட்களுக்கு ஒரு முறை தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறிய பிறகு வெந்நீரில் குளித்து வர கண் சிவப்பு, கண் வலி குறையும்.


எள் பூவை நெய்யிலிட்டு வதக்கி இரவில் கண்ணின் மீது வைத்துக் கட்ட கண் பார்வை தெளிவடையும். பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகப்படுத்த 5 கிராம் அளவு எள்ளை தினமும் காலையில் உட்கொள்ளலாம்.

எள் இலையை நெய்யில் வதக்கி கட்டிகள் மீது கட்ட அவை பழுத்து உடையும். மகளிர் தங்களது கர்ப்ப காலத்தில் அதிக அளவு எள் சாப்பிடுவது கருச்சிதைவை தூண்டும்.

சுவாச மண்டல ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. எலும்பு அடர்த்தியை பராமரிக்கிறது. எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கிறது. கொழுப்பின் அளவை குறைக்கிறது. இரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது.

ஒரு கப் பாலில் உள்ள கால்சியச் சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. பால் சாப்பிட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்து விடும்.

மூட்டு வலி உள்ளவர்களுக்கு வலியையும், வீக்கத்தையும் எள் குறைக்கிறது. எள்ளில் உள்ள செம்பு சத்து, கால்சியச் சத்து, மக்னீசியம் சத்து போன்றவை மூட்டுகளின் ஜவ்வுகளுக்கு தேவையான பலத்தை கொடுக்கிறது.

எள்ளில் உள்ள செம்புச்சத்து இரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை அதிகப்படுத்துகிறது. இதனால் இருதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.