வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

தலைமுடி உதிர்வை தடுத்து கருகருவென்று வளர வேண்டுமா...?

பெண்கள் சிலருக்கு கத்தை கத்தையாக முடி உதிரும். அவர்கள் தாமரை இலை சாற்றை சம அளவு நல்லெண்ணையில் கலந்து அடுப்பிலிட்டு கொதிக்க செய்ய வேண்டும். தைலம் மட்டும் மிதக்கும். அந்த தைலத்தை மட்டும் எடுத்து வைத்து கொண்டு முடி உதிர்கின்ற இடத்தில்  தடவினால் முடி கருகருவென்று வளரும்.

சீரகத்தை நன்கு கறுப்பாகும் வரை வறுத்து பொடி செய்து பின் அதை ஆலிவ் ஆயிலுடன் கலந்து வைக்கவும். இந்த எண்ணெயை, தலையில் தேய்க்கும் முன் நன்கு கலக்கி விட்டு தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் சிறிது நேரம் நன்றாக ஊறிய பின்  குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வது நாளடைவில் குறையும்.
 
முட்டையின் மஞ்சள் கரு மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அந்த கலவையை தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால், முடி உதிர்தல்  பிரச்சனை குறையும்.
 
தேங்காய்ப் பாலை தலையில் தேய்த்துவந்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்து அதை தண்ணீரில்  கலந்து, மிதமாக சூடுபடுத்தி தலையில் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்த பின், குளிக்க வேண்டும். இவ்வாறு, தொடர்ந்து செய்து  வந்தால், நாளடைவில் நல்ல பலன் கிடைக்கும்.
 
வெந்தயத்தை நன்கு அரைத்து, அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ளவும். இந்த கரைசலை தலை முடியில் நன்கு தடவி, 40  நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின் தண்ணீரில் முடியை அலசி விட வேண்டூம். இதை தொடர்ந்து ஒரு மாத காலம் செய்து வந்தால் முடி  உதிர்தல் குறையும்.
 
தேங்காய் எண்ணெயை சூடேற்றி, காய வைத்த நெல்லிக்காய் பொடியை அதில் போட்டு, காய்ச்சி வடிகட்டி, அதனை தினமும் தலையிலும், தலை முடியிலும் நன்கு மசாஜ் செய்தால், முடி கொட்டுதல் முற்றிலும் நின்றுவிடும்.