வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

சக்கரை நோய் வராமல் தடுக்க தினமும் காலையில் சீதாப்பழ இலை டீ...!

சீத்தாப்பழத்தில் விட்டமின் சி, கால்சியம் மற்றும் நீர்சத்து, மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன. இதனால் இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது.
சீதாப்பழத்தில் குளுக்கோஸ், சுக்ரோஸ் சம அளவு காணப்படுவதால்தான் ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இதனாலேயே இது பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டதாக உள்ளது.
 
குழந்தைகளின் கவனிக்கும் திறன் மற்றும் நினைவாற்றல் அதிகரிக்க சீத்தாப்பழத்தை தினமும் உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகி நினைவாற்றல் அதிகரிக்கும்.
 
சர்க்கரை நோயாளிகள் தினமும் காலையில் சீதா மரத்தின் இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் அருந்தி வந்தால் சீக்கிரமாக குணமடைவர். பெண்களுக்கு ஏற்படும் கருச்சிதைவை கட்டுப்படுத்த சீதாப்பழ மரத்தின் வேர் பெரிதும் உதவுகின்றன.
 
சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழவிதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும்.
 
சீத்தாப்பழ விதையால் செய்யப்பட்ட பொடி நம் உடலின் மேனியை பளபளப்பாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. விதையின் பொடியில் தயாரிக்கப்பட்ட டீயை அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்பட்டு தினமும் புத்துணச்சியுடன் இருக்கலாம்.
 
சீத்தாபழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் இதைச் தினமும் சாப்பிடுவது இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும்.