புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பிஸ்தா பருப்பில் அதிக அளவில் வைட்டமின்கள் உள்ளதா...?

மன அழுத்தத்தினால் வரும் இரத்தக் கொதிப்பை பிஸ்தா பருப்பு கட்டுப்படுத்துகிறது. மேலும் இரத்த குழாய்களை விரிவடைய செய்து, நல்ல இரத்த ஓட்டத்தை சீராக்கி அதிக இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

பிஸ்தாவில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை சீர் செய்து மலச்சிக்கலை தடுக்கிறது, மற்றும் குடலில் நல்ல பாக்டீரியா வளர்வதற்கு உதவி செய்கிறது. 
 
குடலில் உள்ள பாக்டீரியாக்கள் இந்த நார்ச்சத்தை நொதிக்கச்செய்து மற்றும் பல நன்மைகளை கொண்ட கொழுப்பு அமிலங்களை உற்பத்தி செய்கிறது. பிஸ்தா பருப்பில் உள்ள துத்தநாகம் உடலின் நோயெதிர்ப்புத் சக்தியை அதிகரிக்கிறது.
 
பிஸ்தா பருப்பை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவது கர்ப்பிணிகளின் உடலுக்குத் தேவையான மற்றும் முக்கியமான பல ஊட்டச்சத்துக்களைக் தருகிறது.
 
பிஸ்தாவில் அதிக அளவில் வைட்டமின்கள் உள்ளது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. மேலும் இது, செல்களுக்கு தேவையான ஆக்சிஜனையும்  கொடுக்கிறது.
 
பிஸ்தா பருப்பில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளது. இது, இரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் ரத்தத்தில் சிவப்பு மற்றும்  வெள்ளை ரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரைப் பராமரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
 
பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து தினமும் மாலையில் சாப்பிட்டு வந்தால் நியாபகச் சக்தி அதிகரிக்கும். பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ ஆனது, புறஊதாக் கதிர்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும், தோல் புற்றுநோய் வராமல் இருக்கவும் உதவுகிறது.