வியாழன், 14 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

காய்ச்சலை குணமாக்கும் அற்புத இயற்கை மருந்து மிளகு !!

காய்ச்சல் குணமாக மிளகை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு அதை வாணலியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும்.


மிளகு நன்கு வறுபட்டு சிவந்து தீப்பொறி பறக்கும் சமயம் இறக்கி மத்தை வைத்து முடிந்த அளவு கடைந்து மீண்டும் அடுப்பில் வைத்து அதில் இரண்டு டம்ளர் குடிநீர் ஊற்ற வேண்டும். தண்ணீர்  நன்கு கொதித்து வற்றி பாதியானது இறக்கி விடலாம்.
 
மிளகு கஷாய நீரை ஆறவைத்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கால் டம்ளர் குடித்தால் காய்ச்சல் குணமாகும். ஒவ்வொரு முறை குடிக்கும் முன் லேசாக  சுட வைத்து இளஞ்சூட்டில் குடித்தல் நல்லது. இந்த மருத்துவத்தை மொத்தமாக செய்து வைத்துக் குடிக்காமல் தினமும் புதிதாக தயார் செய்து குடித்து வந்தால்  நலம். இரண்டே நாட்களில் காய்ச்சல் குணமாகும். மிளகின் காரம் அதிகம் இருந்தால் அதில் சிறிது சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.
 
காய்ச்சல் குணமாக சீரகம் அரைத் தேக்கரண்டி, மிளகு அரை தேக்கரண்டி, இஞ்சித்துண்டு அரை தேக்கரண்டி அளவு எடுத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.  இந்த கலவையுடன் கறிவேப்பிலை ஒரு கையளவு சேர்த்து மீண்டும் அரைக்க வேண்டும். இந்த காய்ச்சல் மருந்தை ஒரு சிறிய நெல்லிக்கனி அளவு எடுத்து  காலையும் மாலையும் வாயில் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீர் குடித்து வர காய்ச்சல் குணமாகும்.
 
வல்லாரை இலை, துளசி இலை மற்றும் மிளகு ஆகியவற்றை ஒரு கைப்பிடி வீதம் எடுத்துக் கொண்டு நன்கு அரைக்க வேண்டும். மைபோல் அரைத்த பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நிழலில் காய வைக்கவேண்டும். நன்கு காய்ந்த பின் காய்ச்சல் உள்ளவர்களுக்கு வேளைக்கு ஒரு உருண்டை வீதம் வாயில்  போட்டு கொதிக்க வைத்து ஆறவைத்த நீரை அருந்தச் செய்தால் காய்ச்சல் குணமாகும்.