1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை வழங்கும் பனங்கிழங்கு !!

பனை மரத்திலிருந்து கிடைக்கும் நுங்கு அதனை வெட்டாமல் மரத்திலேயே விட்டுவிட்டால் அந்த நுங்கு நன்றாக பழுத்து பனம்பழமாகி விடும்.


இந்த பனம் பழத்தினை எடுத்து வெட்டி நிலத்தில் குழி தோண்டி அதில் புதைத்து வளர்த்து வந்தால் கிடைப்பதுதான் பனங்கிழங்கு.
 
மலக்கழிவை வெளியேற்ற இயலாமல் அதாவது மலச்சிக்கலால் அவதியுறுபவர்கள் வெயிலில் காய வைத்த பனங்கிழங்கை (பச்சையாக) எடுத்து, தேவையான  அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து ஈரமாவு ஆக அரைத்து தோசை சுட்டு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும்.
 
பனங்கிழங்கை மஞ்சளுடன் சேர்த்து வேகவைத்து, வெயிலில் காயவைத்து, பின் அதை அரைத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து அதிகமாகும்.
 
பனங்கிழங்குடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை மற்றும் உடல் உள் உறுப்புகள் வலிமையாகும். சர்க்கரை நோய், வயிறு  மற்றும் சிறுநீர் பாதிப்பு பிரச்னை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
பனங்கிழங்கில் உள்ள அதிகப்படியான இரும்பு சத்து இரத்த சோகை நோயை எளிதில் குணப்படுத்துகிறது. எனவே இரத்த சோகை உள்ளவர்கள் இந்த பனங்கிழங்கை தொடர்ந்து சாப்பிடுங்கள் நல்ல பலன் கிடைக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
 
மலச்சிக்கல் பிரச்சனையால் தினமும் அவதிப்படுபவர்கள் இந்த பனங்கிழங்கை சாப்பிடலாம். இவற்றில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யும்.
 
மிகவும் ஒல்லியாக உடல் எடை குறைவாக உள்ளவர்கள் இந்த பனங்கிழங்கை சாப்பிடுவதினால் உடல் எடையை மிக எளிதாக அதிகரிக்கலாம்.