1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : சனி, 5 மார்ச் 2022 (18:04 IST)

பல்வேறு வகையான உடல்நல பாதிப்புகளை போக்கும் படிகார கல் !!

படிகார கல் கொண்டு பல்வேறு வகையான உடல்நல பாதிப்புகளை போக்கியுள்ளனர் நமது முன்னோர்கள். அந்த படிகார கல் கொண்டு உடல்நல பிரச்சனைகள் மற்றும் குறைபாடுகளை போக்கிக் கொள்ளலாம்.


படிகார கல்லுக்கு எதிர்மறையான சக்திகள் மற்றும் அதிர்வுகளை ஈர்த்துக் கொள்ளும் ஆற்றல் அதிகம் உள்ளது.

கால் விரல்களின் இடுக்குகளில் வியர்வை அதிகம் சேர்ந்து, கிருமித் தொற்று உண்டாகி ஏற்படும் புண்கள் ஆகும். இத்தகைய பாத விரல் புண்களுக்கு படிகார கல் சிறந்த நிவாரணம் தருகிறது.

ஒரு அகலமான பாத்திரத்தில் சூடான நீரை எடுத்துக் கொண்டு, அதில் 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் படிகாரப் பொடியை போட்டு நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கால் விரல் புண்கள், ஏற்பட்டவர்கள் அந்த பாத்திரத்திற்குள்ளாக பாதங்களை வைத்து பாத்திரத்தில் இருக்கும் நீரின் வெப்பம் குறையும் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சில நாட்களுக்கு செய்து வர கால் விரல் இடுக்குகளில் ஏற்படும் புண்கள் நீங்கும்.

அக்குள் பகுதிகளில் வியர்வையால் உண்டாகும் கெட்ட கிருமிகளின் வளர்ச்சியையும் அழித்து, உடல் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்கிறது.

தலைக்கு குளிக்கும் சமயத்தில் சீயக்காய் அல்லது ஷாம்பூ உடன் சிறிதளவு படிகாரப் பொடியை சேர்த்து கலந்து, தலைக்கு போட்டு நன்றாக தேய்த்து குளித்து வந்தால் தலையில் இருக்கின்ற பொடுகுகள் முற்றிலும் நீங்கும். அடிக்கடி தலையில் அரிப்பு ஏற்படாமலும் தடுக்கும்.