திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

முடி உதிர்வு பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் வெங்காய ஹேர்பேக் !!

வெங்காய ஹேர்பேக் தலைமுடி உதிர்வுப் பிரச்சினையை போக்குகிறது. நம்மில் பலரும் சந்திக்கும் தலையாய பிரச்சினை தலை முடி உதிர்வுதான். இதை தீர்க்க வெங்காய ஹேர்பேக்கினை எப்படி செய்வது என்றும், அதனை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம்.

தலைமுடி அடர்த்தியினை அதிகரிக்கச் செய்யும் ஹேர்பேக்குகளில் பெஸ்ட் ரிசல்ட் தரக்கூடிய ஹேர்பேக் வெங்காய ஹேர்பேக் ஆகும்.
 
தலைமுடி உதிர்வதைத் தடுத்து முடியின் வேரை வலுப்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்வதில் சின்ன வெங்காயம் முக்கிய பங்காற்றுகிறது எனலாம். இதற்கு காரணம் சின்ன வெங்காயத்தில் உள்ள சல்ஃபர் என்ற வேதிப் பொருள்தான். சின்ன வெங்காயச் சாற்றை தலையில் 5 நிமிடம் மசாஜ் செய்வதனால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.
 
தேவையானவை: சின்ன வெங்காயம்- 2, மயோனைஸ்- 3 ஸ்பூன், தயிர்- 25 மில்லி.
 
செய்முறை: வெங்காயத்தினை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து வெங்காயத்துடன் நீர் சேர்த்து மிக்சியில் போட்டு ஜூஸ் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் தயிர் மற்றும் மயோனைஸ் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவிட்டுப் பயன்படுத்தவும்.

இந்த வெங்காய ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு சீயக்காய் கொண்டு அலசினால் தலைமுடி உதிர்வுப் பிரச்சினை தீர்வுக்கு வரும்.