வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

கர்ப்பகாலத்தில் ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனை...!

கர்ப்பகாலத்தில் தூக்கம் என்பது மிக முக்கியமான ஒன்று. அவ்வாறு சரியான உறக்கம் இல்லாதபோது அது ஆபத்துகளை கூட விளைவிக்கும். பெண்கள் கர்ப்பகாலத்தில் தூக்கமின்றி அவதிபடுவதை பார்த்திருக்கிறோம். இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் அவர்களுக்கு பயம் தொற்றிக்கொள்வதேயாகும்.
மாதந்தோறும் அவர்கள் எடை கூடுவதால் உடல் எடை, அழுத்தம் போன்ற காரணத்தினாலும், அவ்வப்போது சிறுநீர் வந்துக் கொண்டே இருக்கும். இதனால் கூட  அவர்களது தூக்கம் பாதிக்கிறது.
 
பெரும்பாலும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மதியம் மற்றும் மாலை இடைப்பட்ட நேரத்தில் தூங்குவது இயல்பு. இதன் காரணாமாக அவர்களது இரவு நேர தூக்கம் பாதிக்கப்படுகிறது. பெண்களுக்கு கர்ப்பம் தரித்த முதன்மை காலத்தில் குமட்டல் ஏற்படும் போதே, குடல் இயக்க திறனில் இயல்பாக சிறிய குறைபாடு  ஏற்படும். இதனால் செரிமான பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் நெஞ்செரிச்சல், வாயு போன்ற உடல்நல குறைபாடுகள் ஏற்படலாம்.
 
வயிறு பெரிதாக இருப்பதால் அவர்களால் சௌகரியமாக படுத்து உறங்க முடியாது. மற்றும் திரும்பி படுக்கும் போது கருவில் வளரும் குழந்தைக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற அவர்களது அச்சமும் கூட தூக்கம் களைவதற்கு ஓர் காரணமாக இருக்கிறது.