ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (18:25 IST)

மாங்காயில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும் !!

உணவில் மாங்காயை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். மாங்காய் செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும்.


சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை குணபடுத்த மாங்காய் பெரிதும் பயன்படுகிறது. மாங்காய் இலையை தேன் விட்டு வதக்கி தண்ணீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை குடித்து வந்தால் குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.

நீரிழிவு உள்ளவர்கள், மா கொழுந்து இலையை எடுத்து உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும்.

காலில் பித்த வெடிப்பு உள்ளவர்கள் வெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

தேமல், படை உள்ளவர்கள் மாம்பிசினை மாம்பழச்சாறுடன் கலந்து பூசினால் தேமல், படை நீங்கும். மலச்சிக்கலைப் போக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், வயிற்றுப்புண், வாய்ப்புண்ணை ஆற்றும்.

மாங்காயில் வைட்டமின் சி சத்து இருப்பதால், புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. மாலைக்கண் மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மாங்காய் சாப்பிடுவது சரியான தீர்வாகும்.