திங்கள், 25 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அருகம்புல்லில் உள்ள சத்துக்களும் மருத்துவ குணங்களும் !!

காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாற்றினைக் குடித்து வர பல்வேறு பயன்களை பெறலாம். ஆனால், அருகம்புல் ஜூஸ் குடித்த அடுத்த 2 மணி  நேரத்திற்குப் பிறகே மற்ற உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.

அருகம்புல் சாறை தினமும் குடித்து வந்தால், இரத்தத்தைப் பெருக்கி, ரத்தச்சோகை ஏற்படாமல் பாதுகாக்கிறது. ரத்த வெள்ளை அணுக்களின் என்ணிக்கையை அதிகரிக்க உதவுவதோடு, உடலின் நோய் எதிர்புச் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. 
 
இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகங்கள்ன் சீரான இயக்கத்திற்கும் அருகல்புல் உதவி செய்கிறது. கல்லீரலில் கற்கள் உண்டாவதைத் தடுப்பதுடன், ரத்த  அழுத்தத்தையும் ஒழுங்குப்படுத்துகிறது.
 
காரத்தன்மை கொண்ட அருகம்புல்லில் ஏராளமான உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் செறிந்து காணப்படுகிறது. இவற்றின் உதவியோடு, உடலில் சேரும் நச்சுப்  பொருள்களை நீக்கும் வல்லமை கொண்டது அருகல்புல் என்றால், அது மிகையாகாது. தசை தளர்ச்சியை போக்கி, உடலுக்கு வலுவை தரக்கூடிய தன்மைக்  கொண்டது. 
 
காரத்தன்மை உடைய மூலிகையாக இருந்தாலும், இரத்தத்தில் உள்ள அமிலத் தன்மையை சமப்படுத்தி, அல்சர் என்னும் குடற்புண்ணைக் குணப்படுத்த உதவுகிறது.
 
அருகம்புல்லில் உள்ள சத்துக்கள், எல்லா விதமான நச்சுக்கிருமிகளையும் நீக்கும் ஆற்றல் கொண்டது. ரத்த நாள அடைப்பு உள்ளவர்கள் அருகம்புல்லை அரைத்துப்  பாலில் கலந்து சாப்பிட்டால் நோய் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசிவதைத் தடுத்து, பற்களை உறுதிப்படுத்துகிறது.
 
பற்களில் படிந்துள்ள கறைகளைப் போக்கி வெண்மையாக்குகிறது. மேலும் வாய் துர்நாற்றத்தையும் போக்குகிறது. நச்சுப் பொருள்களால் உண்டாகும் புற்றுநோயை  தடுக்கும் ஆற்றல் கொண்டது அருகல்புல். இதில் இன்சுலின் நிறைந்துள்ளதால், நீரிழிவு நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. மேலும் ஆஸ்துமாவுக்கு மருந்தாக  அமைகிறது.
 
அதிகப்படியான உடல் வெப்பத்தைத் தணித்து, உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. தோல் நோய்களுக்கும், சேற்றுப் புண்ணுக்கும் மருந்தாக அருகம்புல் விளங்குகிறது. அருகம்புல்லுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, உடலில் பூசி குளித்தால், வேர்க்குரு, சொறி, சிரங்கு ஆகியவை நீங்கும்.