ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

நரம்பு பாதிப்பு பிரச்சனைகளை நீக்கும் வல்லாரை

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துகளை தகுந்த முறையில்  பெற்றிருக்கிறது. இதனாலேயே ‘வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே’ என்ற பழமொழி ஏற்பட்டது.
வல்லாரை கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.
 
வெரிகோஸ் வெயின் என்று சொல்லக் கூடிய கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சினைக்கும் இந்த வல்லாரை ஒரு மிக சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.  வல்லாரைக் கீரை மத்திய நரம்பு மண்டலத்தை பலப்படுத்தக் கூடியதாக விளங்குகிறது. வல்லாரை விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில் சாப்பிட்டு வந்தால்  நரை மறைந்து இளமை தோற்றம் திரும்பும்.
 
உடலில் ஏற்படும் கட்டிகள், புண்கள் ஆகியவற்றை சரி செய்து விடும் ஆற்றல் வல்லாரைக்கு உண்டு. வல்லாரை கீரையுடன் மிளகு, துளசி இலை ஆகியவற்றை  சம அளவு எடுத்து மெழுகு பதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல்  குணமாகும்.
வல்லாரைப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லிலுள்ள கறைகள் நீங்கும். மேலும் பல் ஈறுகள் பலப்படும். கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல்  போன்றவற்றை போக்கி கண் நரம்புகளுக்கு பார்வைத்திறனை அதிகரிக்கிறது.
 
இதையும் படியுங்கள்: 

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் ஆவாரம் பூ...!

யானைக்கால் நோய் உள்ளவர்கள் வல்லாரைக் கீரையை தொடர்ந்து காலில் வைத்து கட்டி வந்தால் யானைக்கால் நோய் எளிதில் குணமாகும். வல்லாரை  கீரையை அரைத்து, அதை சாப்பிட்டு வந்தால் விரை வீக்கம், வாயு வீக்கம், தசை சிதைவு போன்றவை குணமாகி விடும்.