1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பல்வேறு நோய்களுக்கு தீர்வாகும் நெருஞ்சில் செடி !!

நெருஞ்சில் வாதத்தையும், கபத்தையும் குறைக்கும். பசியை தூண்டும் வயிற்றுக்கோளாறுகளை போக்கும். மலச்சிக்கல், மூலவியாதிகளுக்கு நெருஞ்சில்  பயன்படுகிறது.

நெருஞ்சில் கஷாயத்துடன் சுக்கு சேர்த்து காலையில் பருகினால் ரூமாட்டிஸம், இடுப்பு வலி குறையும். நெருஞ்சில் இதயத்திற்கு நல்லது. ரத்தக்குழாய்களை  விரிவடையச் செய்து சீராக இரத்த ஒட்டம் இயங்க உதவும்.
 
நெருஞ்சி இலையை வெள்ளாட்டு பாலுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி, தேன் சேர்த்து குடித்துவர ஆண்மை அதிகரிக்கும். நெருஞ்சி செடியை நிழலில் உலர்த்தி  சூரணம் செய்து 2 கிராம் அளவு பாலுடன் கலந்து காலை மாலை இருவேளை குடித்து வர வெட்டை நோய் குணமாகும்.
 
சிறுநீரகக் கோளாறு, சிறுநீரகக் கல் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படும். கர்ப்பிணி பெண்கள், நெருஞ்சி முள்ளை சுடுநீரில் கொதிக்க வைத்து கசாயமாக உட்கொண்டால் சிறுநீர் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
 
சிறுநீரக கல் அடைப்பு நெருஞ்சி இலைகளை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்துவர சிறுநீரில் ரத்தம் வெளிப்படுதல் குணமாகும். விதையினை அவித்துக் காயவைத்துத் தூளாக்கி இளநீருடன் உட்கொண்டால் சிறுநீர் தொடர்பான பிரச்சினைகள் தீரும்.