புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (16:31 IST)

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் ஆரோக்கியத்தையும் தரும் வேப்பிலை !!

வேப்பிலையோடு சமமாக தோல் நீக்கிய சுக்கை சேர்த்து இதன் எடைக்கு நான்கில் ஒரு பங்கு இந்துப்பை கலந்து இதை அடுப்பிலிட்டு லேசாக சூடாக்கி வெதுவெதுப்பாக இருக்கின்ற பொழுது கண்களில் வைத்து கட்டி வர கண் வலி கண் அரிப்பு நீங்கும்.

ஒரு கைப்பிடி அளவு முதிர்ந்த வேப்பிலையை எடுத்து மண்பானையிலிட்டு நன்கு கருகும்படி வறுத்து தூள் செய்து இதில் மூன்று கிராம் எடுத்து சுட்டு பொடித்த வசம்பு தூளை இதன் எடைக்கு பாதி சேர்த்து இதை மோரில் கலக்கி குடித்துவர அஜீரணக் கோளாறால் ஏற்பட்ட அடிக்கடி பேதியாவது குணமாகும்
 
வேப்பிலை மற்றும் மஞ்சள் இரண்டையும் சமமாக எடுத்து நன்கு அரைத்து அம்மைப் புண் மீது பூசி வர புண்கள் ஆறிவிடும்.  வேப்பிலையும் மஞ்சளையும் அரைத்து ஒரு ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் கலந்து இதை அடுப்பில் வைத்து பாதியாகச் சுண்டக் காய்ச்சி காலை மாலை இருவேளையும் அருந்தி வர அம்மை நோய் குணமாகும்.
 
கால் லிட்டர் தண்ணீரை முதல் நாள் இரவு நன்கு கொதிக்கவைத்து அதில் பதினைந்து வேப்பம் பூக்களை போட்டு மூடி வைத்திருந்து காலையில் இந்த நீரை வடிகட்டி குடித்துவர உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் ஆரோக்கியமும் அதிக பலமும் உண்டாகும்.
 
வேப்பமரத்து உள் பட்டையை காயவைத்து இடித்து இதன் எடைக்கு சமமாக கடுக்காய்த் தூளை சேர்த்து இதில் மூன்று கிராம் எடுத்து வெந்நீரில் கலந்து தினம் இருவேளை முப்பது நாட்கள் சாப்பிட்டு வர தோல் நோய்கள் அனைத்தும் நீங்கும் கொடிய குஷ்ட நோயும் இதனால் குணமாகும்.
 
வேப்ப மரத்தின் வேரை இடித்து ஒரு கைப்பிடி எடுத்துக்கொண்டு  ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து இதை பாதியாக சுண்ட காய்ச்சி இந்த நீரால் வாய் கொப்பளித்து வர பல்வலி குணமாகும் வாய் துர்நாற்றம் அகலும்.