வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 30 மார்ச் 2017 (20:21 IST)

நரை முடி பிரச்சனையா? பத்தே நிமிடங்களில் தீர்வு

இன்றைய நவீன உலகில் உணவு முறை மற்றும் மாசு காற்று, தண்ணீர் ஆகியவற்றால் தலை முடி பிரச்சனை அதிக அளவில் ஏற்படுகிறது.



 

 
தலைமுடி கொட்டுதல், இளம் வயதிலே பெரும்பாலான ஆண்களுக்கு நரை முடி ஏற்படுகிறது. அதை மறைக்க அடித்துக்கொள்ளும் டை இரசாயனம் கலந்ததாக இருப்பதால், எளிதில் முடி கொட்டும் பிரச்சனையும் ஏற்படுகிறது.
 
வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டே நரையைப் போக்க முடியும். இதற்காக தினமும் 10 நிமிடங்கள் வரை செலவிடுதல் போதுமனது. 
 
தேவையான பொருட்கள்:
1/4 கப் தேங்காய் எண்ணெய்
 
1 எலுமிச்சை 
 
தேங்காய் எண்ணெயை எடுத்து, அதில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை தலைமுடியின் அடி வேரில் தேய்த்து, 10 முதல் 15 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.
 
பின்னர் ஷாம்பு கொண்டு குளிக்க வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தாள் மிக விரைவில் உங்கள் நரை முடியின் நிரம் மாறிவிடும். வெள்ளை முடியின் நிறம் கருமையாக காணப்படும்.