வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அஜீரண கோளாறை நீக்க உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

அஜீரணம் ஏற்படுவதற்கு சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, நாம் சாப்பிடும் உணவு சாப்பிடும் உணவு சாப்பிடும் முறை மற்றும் தூக்கமின்மை  காரணமாகவும் அஜீரணம் ஏற்படலாம். 

எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகிய இரண்டையும் சம அளவில் கலந்து ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள்.
 
அஜீரண கோளாறு உள்ளவர்கள் உணவு சாப்பிட்ட பின் சீரக தண்ணீர் குடித்து வந்தால் அஜீரணம் குணமாகும்.
 
வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு மூன்று பெருங்காயம் தூள் கலந்து குடித்தால் அஜீரண கோளாறு நீங்கும்.
 
கறிவேப்பிலை சிறிது சீரகம், மற்றும் ஒரு சிறு துண்டு இஞ்சி இந்த மூன்றையும் ஒரு கிளாஸ் அளவு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அறிய பின் வடிகட்டி  குடித்து வந்தால் அஜீரணம் நீங்கும்.
 
ஒரு டம்ளர் மோரில் கால் டீஸ்பூன் மிளகு தூள்,கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து தினமும் இருவேளை குடித்து வந்தால் அஜீரணம் சரியாகும்.