Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மூக்கடைப்பை சரிசெய்யும் சில எளிய இயற்கை வைத்திய குறிப்புகள்

Widgets Magazine

சளி பிடித்துவிட்டால் இயற்கையான முறையில் அதை வெளியேற்ற வேண்டுடுமே தவிர ரசாயன மருந்துகளின் மூலம் அதை நம் உடலுக்குள்ளேயே வைக்கப் கூடாது. சளி சுவாசிக்க சிரமத்தை ஏற்படுத்தும். பெரும்பாலும் சளி அதிகம் இருப்பவர்களுக்கு மூக்கடைப்பு இரவு நேரத்திலும், மிகவும் குளிர்ச்சியான காலநிலையின் போதும் ஏற்படும்.

 
ஜலதோஷத்தின் போது ஏற்படும் மூக்கடைப்பை சரிசெய்ய சிறிது உப்பை போட்டு, அதை நன்கு கலக்கி கொள்ளவும். பின்பு  அதனை மூக்கின் அருகில் வைத்து ஆழமாக உறிஞ்ச வேண்டும். அந்த நீரவி மூக்கினுள் பரவ வேண்டும். இதன் மூலம்  மூக்கடைப்பு எளிதாக நீங்குவதுடன், ஜலதோஷத்தை கட்டுப்படுத்த முடியும்.
 
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து இறக்கவும். அதை தட்டு போட்டு மூடி விடவும். ஆவி பிடிக்கும் போது அதில்  நீலகிரி தைலம் 2 சொட்டு ஊற்றி ஆவி பிடிக்க வேண்டும். இதனை 2 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் மூக்கடைப்பு, சளி  தொல்லை நல்ல தீர்வு காணலாம்.
 
இரவில் படுக்கும் போது மூக்கடைப்பு ஏற்பட்டால், அதனால் நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ள முடியாது. அதுமட்டுமின்றி,  கடுமையான காது வலியையும் ஏற்படுத்தும். ஆகவே மூக்கடைப்பு ஏற்படும் போது உடனே அதற்கு சிகிச்சை எடுக்க வேண்டும். அதிலும் நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சிகிச்சை அளிக்கலாம். சரி, இப்போது மூக்கடைப்பில் இருந்து விடுபடுவதற்கான சில எளிய இயற்கை வைத்தியங்களைப் பற்றி பார்ப்போம்.
 
ஒரு கப் தண்ணீரில் 2 அல்லது 3 பூண்டு பற்களைப் போட்டு, அத்துடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, சில நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், முகத்தில் தேங்கியுள்ள சளி இளகி வெளியேறி, மூக்கடைப்பில் இருந்து நிவாரணம்  அளிக்கும்.
 
வெதுவெதுப்பான நீரில் நனைத்து துணியை நன்கு பிழிந்து, முகத்தின் மேல் 10-15 நிமிடம் வைக்க வேண்டும். இப்படி ஒரு  நாளைக்கு பலமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
சாதாரண டீ செய்து குடிப்பதற்கு பதிலாக, தினமும் புதினா, இஞ்சி, ஏலக்காய், துளசி போன்றவற்றை சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தைராய்டு பிரச்சனையால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் உணவு முறைகள்

பெண்கள் அதிகம் தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி ...

news

தினசரி 2 அத்திப் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்தி பழம் மாதவிடாய் ...

news

இயற்கை மருத்துவத்தில் அருகம்புல்லின் பயன்களை தெரிந்து கொள்வோம்...!

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். உடல் வெப்பத்தை ...

news

எளிதாக கிடைக்கக் கூடிய வேர்க்கடலையில் என்னென்ன சத்துக்கள் உள்ளது தெரியுமா...?

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான ...

Widgets Magazine Widgets Magazine