1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மூக்கிரட்டை மூலிகை மருத்துவ பயன்கள் !!

மூக்கிரட்டை நிலங்களிலும் புற்கள் அடர்ந்துள்ள இடங்களிலும் இயல்பாக வளர்கின்றன. இலை, வேர் ஆகியவை அதிகமான மருத்துவப் பயன் கொண்டவை. இதன் முக்கியமான பண்பு சிறுநீரை அதிக அளவில் வெளியேற்றுவதாகும்.

மஞ்சள் காமாலை, மேகவெட்டை போன்ற நோய்களால் அவதிப்படும்போது சிறுநீர் எளிதில் வெளியேற இது உதவுகின்றது. இதன் இந்த மருத்துவக் குணம் உயர்நிலை மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
செடி, வேர், கைப்புச் சுவையும் வெப்பத்தன்மையும் கொண்டவை. இவை கோழை அகற்றும். மலமிளக்கும்; சிறு நீரைப் பெருக்கும்; காமாலை, நீர்க்கட்டு, வயிற்றுப் புழுக்கள், பெரு வயிறு, சோகை போன்றவற்றை குணமாக்கும்.
 
கீல்வாதம், இரைப்பு, இதய நோய்கள், மண்ணீரல் வீக்கம், காச நோய் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும்.
 
புட்பகம், மூக்குறட்டை, முக்கரைச் சாரணை, இரத்த புட்பிகா, சிறிய மூக்கிரட்டை ஆகிய மாற்றுப் பெயர்களும் உண்டு. இந்தியா முழுவதும் பாழ் நிலங்களிலும்  விவசாய
 
நிலங்களிலும் புற்கள் அடர்ந்துள்ள இடங்களிலும் இயல்பாக வளர்கின்றன. இலை, வேர் ஆகியவை அதிகமான மருத்துவப் பயன் கொண்டவை. இரத்த சோகை குணமாக இலையைப் பொரியல் செய்து வாரம் இரு முறைகள் சாப்பிட்டு வர வேண்டும்.
 
கண் பார்வை தெளிவடைய வேர்த்தூள் காலை மாலை வேளைகளில் கால் தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து உட்கொள்ள வேண்டும். இலையை கீரையாக சமைத்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் குணமாகும். கண் பார்வை தெளிவடையும். உடல் வனப்பாகும்.