குதிக்கால் வெடிப்பை சரிசெய்ய உதவும் குறிப்புகள் !!
கால்களை நன்கு சுத்தம் செய்தபின் காட்டன் துணியால் ஈரமில்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். பின் பாதிக்கப்பட்ட இடத்தில் வெஜிடபிள் எண்ணெய்யைத் தடவலாம்.
பின் சாக்ஸ் அணிந்து கொண்டு இரவு அப்படியே தூங்கிவிடுங்கள். இவ்வாறு தினமும் செய்தால் வெடிப்புகள் தானாக மறைந்துவிடும்.
எலுமிச்சை சாறை வெது வெதுப்பான நீரில் பிழிந்து கலந்து கொள்ளுங்கள். அதில் 20 நிமிடங்கள் கால்களை சுத்தம் செய்தபின் ஊற வையுங்கள். வெடிப்புகளோடு கால்களில் இருக்கும் இறந்த செல்களையும் நீக்கிவிடும்.
3 மேசைக் கரண்டி பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து கால்களை 15 நிமிடங்கள் ஊற வையுங்கள். பின் சொர சொரப்பான கல்லைக் கொண்டு கால்களை நன்கு தேய்க்க குதிகால் வெடிப்பு நீங்கும்.
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை ஊற்றி பாதங்களை வாரம் ஒருமுறை 10 நிமிடம் ஊற வைத்து வந்தால் பாதங்கள் மென்மையுடன் இருக்கும்.
பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் உள்ள வெடிப்பு பகுதியில் தேய்த்து வந்தால் குதிகால் வெடிப்பு மறைந்து விடும். மருதாணி இலைகளை நன்றாக அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.