வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தும்பை செடியின் அற்புத நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

தும்பை இலைச்சாற்றுடன் சிறிது தேன் கலந்து தினமும் இருவேளை பருகி வர அடிக்கடி ஏற்படும் ஜலதோஷ பாதிப்பிலிருந்து விடுபடலாம்.

தும்பை இலை மற்றும் வேப்பிலை இவை இரண்டையும் சேர்த்து, அனல் மூட்டினால், அதனால் வரும் புகையால் கொசுக்கள் வராமல் தடுக்கலாம். இந்தப் புகை, நாம் சுவாசிக்கும் போது, உடல் நலமாக இருக்கும்.
 
தும்பை இலை காட்டாமணி இலை இவற்றை சரி விகிதத்தில் கலந்து அரைத்து, விரல் நுனி அளவு எடுத்து பாலில் கலந்து தினமும் அருந்தி வர பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிலக்கு பிரச்சனை குணமாகும்.
 
தும்பை இலையை, ஆட்டுப்பாலில் இட்டு, காய்ச்சி அந்த பாலை தொடர்ந்து பருகி வர கருப்பை பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். மிக முக்கியமாக இந்த மருந்து எடுத்துக் கொள்ளும்போது நாம் அன்றாடம் சாப்பிடு உணவில் , உப்பு, புளி, காரம். கண்டிப்பாக சேர்க்கக் கூடாது.
 
தும்பை இலையுடன் துத்தியில சாறு எடுத்து பாலில் கலந்து அருந்தி வர உள் மூலம், வெளி மூலம். மூலம் உள்ளிட்ட அனைத்து வகை மூல வியாதிகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
 
தும்பை இலை மற்றும் பாசிப்பருப்புடன் கலந்து கொதிக்க வைத்து சாப்பாட்டில் பருப்பு போல மசித்து சாப்பிட்டால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய தொண்டை சம்பந்தப்பட்ட இன்னல்கள் குணமாகும்.
 
தும்பை இலைச் சாற்றை தேங்காய் எண்ணெய்யில் இட்டு காய்ச்சி ஆறாத காயங்கள் மற்றும் புண்கள் மீது தடவி வந்தால் விரைவில் புண் ஆறிவிடும்.
 
தும்பை இலை பாலில் கலந்து சூடாக்கி பருகி வர கண் பார்வை குறைபாடுகள் சரியாகும். தேள் கடித்தவர்களுக்கு தும்பை இலை சாற்றை நாலு துளி அளவு எடுத்து, தேனில் கலந்து தேள் கடித்த இடத்தில் தும்பை இலை, சாற்றால் தேய்த்து விட விஷம் குறைந்து விடும்.