திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 9 பிப்ரவரி 2022 (19:00 IST)

உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் எலுமிச்சை சாறு !!

வைட்டமின் `சி நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலுமிச்சை சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், உடலில் தேவையில்லாத கொழுப்பு கரைக்கப்படும்.


தினமும் உடற்பயிற்சிக்கு பின், ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றை குடிப்பது சிறந்த பலனைத் தரும்.  சிலருக்கு பயணம் மேற்கொள்ளும் போது, வாந்தி வருவது போல் உணர்வார்கள். அவ்வாறு குமட்டல் ஏற்படும் போது, எலுமிச்சையை நுகர்ந்து பார்த்தால், குமட்டலைப் போக்கலாம்.

எலுமிச்சை சாற்றை அதிகம் பருகினால், அது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீரை சிறுநீராக வெளியேற்றிவிடும். எனவே, வாத நோய் உள்ளவர்கள், எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் நல்லது.

தினமும் எலுமிச்சை ஜூஸ் குடித்தால், புற்றுநோய் அபாயத்திலிருந்து விடுபடலாம்.  உடலில் சோர்வு மற்றும் மன அழுத்தம் காரணமாக வரும் தலைவலியைப் போக்க, எலுமிச்சை டீ மிகவும் சிறந்தது.

குழந்தைகளின் வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களை வெளியேற்றுவதற்கு எலுமிச்சை பயன்படுகிறது. ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில், உப்பு மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து குடித்தால் செரிமான பிரச்னை குணமாகி விடும்.

எலுமிச்சை சாற்றில், உப்பு மற்றும் கடுகு எண்ணெய் ஊற்றி, அதனை வாயில் ஊற்றி கொப்பளித்தால், பற்களில் உள்ள கறைகள், பாக்டீரியாக்கள் மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவை நீங்கி, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

உடலில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால், அந்த இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றினை தடவினால், காயங்கள் எளிதில் குணமாகிவிடும். சரும பராமரிப்பில் எலுமிச்சை அதிகம் சேர்க்கப்படுகிறது.