திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இயற்கையில் கிடைக்கும் அற்புத மருத்துவகுணம் நிறைந்த கருப்பட்டி !!

கருப்பட்டியில் இருக்கும் சுண்ணாம்பு சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் வேறு எதிலுமே இல்லாத அளவிற்கு மகத்துவமானது என்று கூறலாம். குறிப்பாக பெண்களுக்கு கருப்பட்டி சிறந்த ஆரோக்கியத்தை கொடுக்கும்.

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்து காபி குடிக்கலாம். இதனால் உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவு சீராத கட்டுக்குள் இருக்கும். 
 
சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை இருந்தால் கைக்குத்தல் அரிசியில் சமைத்த சாதத்துடன், கருப்பட்டியை கலந்து சாப்பிடலாம். 
 
கருப்பட்டியில் செய்யப்படும் இனிப்பு பண்டங்கள், பணியாரங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உடல் திடத்தை கொடுக்கும்.
 
கருப்பட்டியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த பிரச்சனை படிப்படியாக நீங்கிவிடும். நன்கு பசி எடுக்க, சீரகம், சுக்கு வறுத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் போதும். நன்கு பசி எடுக்க துவங்கிவிடும். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கருப்பட்டியை மறந்து, தீராத நோயை உண்டாக்கும் வெள்ளை  சர்க்கரையை தேடித் தேடிப் போய் வாங்கி ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
 
வெள்ளை சர்க்கரை உடலில் எவ்வளவு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்கிற ஆபத்தை உணராமல் அதிகமாக பயன்படுத்தி வருகிறீர்கள். ஆனால் கருப்பட்டி என்பது இயற்கையாகவே கிடைக்கும் அற்புதமான மூலிகை மருந்தாகும்.