புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 10 மே 2022 (19:56 IST)

வயிற்றில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் சரிசெய்யும் கருணைக்கிழங்கு !!

கோடை காலங்களில் கருணைக்கிழங்கை சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வரலாம். உடல் வெப்பத்தையும் மூலசூட்டையும் நீக்கும் சக்தி கருணை கிழங்கில் உள்ளது.


கருணைக்கிழங்கில் வைட்டமின் சி., வைட்டமின் பி, பொட்டாசியம்., இரும்பு சத்துக்கள் உள்ளது. கருணைக் கிழங்கை நன்றாக வேகவைத்து சமைக்க வேண்டும். இல்லையென்றால் நாக்கில் அரிப்பு ஏற்படும்.

வேறெந்த கிழங்குகளிலும் இல்லாத அளவுக்கு கருணைக்கிழங்கில் அதிக மருத்துவகுணங்கள் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்பாடு என்ற நோய்க்குக் கைகண்ட மருந்தாக உதவுகிறது. மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் இடுப்பு வலி, கைகால் வலியை போக்கும்.

கருணை கிழங்கில் உள்ள புரதம், வைட்டமின் ஏ ரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது. மாரடைப்பு, கேன்சர் வரவிடாமல் தடுக்கிறது. அல்சரை குணப்படுத்தும் மருந்து கருணைக்கிழங்கை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

வாரம் ஒரு முறை கருணைக்கிழங்கை மசியல் அல்லது குழம்பு வைத்து சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிற்றில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் நீங்கும்.