புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நோய்களுக்கு அற்புத நிவாரணம் தரும் கல்யாண முருங்கை!!

கல்யாண முருங்கையின் பூ கர்ப்ப நோய்களுக்கு சிறந்த மருந்து. சுவாசகாசம் என்னும் மூச்சிரைப்பு நோய் அதிகரிக்கும்போது அரிசிக்கஞ்சியில், பூண்டை வேகவைத்து அதில் 30 மி.லி கல்யாண முருங்கை சாறு கலந்து சாப்பிட்டால் கபம் வெளியேறி மூச்சிரைப்பு கட்டுப்படும்.
கல்யாண முருங்கை இலையை ஆமணக்கு எண்ணெய் தடவி இளஞ்சூட்டில் வீக்கம் உள்ள இடத்தில் கட்டினால் வீக்கம் குறையும். மூட்டு  வலிக்கு இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்கவேண்டும்.
 
கல்யாண முருங்கையின் பூக்கள் சிவப்பு நிறத்தில் பார்க்க அழகாக தோன்றும். இதற்கு கல்யாண முருங்கை என்ற பெயரும் உண்டு.
 
கல்யாண முருங்கை இது துவர்ப்பும், கசப்பும் கலந்தது. பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் கடுமையான வலி ஏற்படும். இதற்கு  முள்முருங்கை இலைசாற்றை 50 மி.லி எடுத்து, மாதவிலக்கு ஆரம்பிக்கும் ஐந்து நாட்களுக்கு முன்பிருந்து தினமும் பருகவேண்டும். வலி  கட்டுப்படும். இந்த சாற்றில் 10 மி.லி. எடுத்து, வெந்நீர் கலந்து பருகினால் கபம், இருமல் நீங்கும்.
ஒரு தேக்கரண்டி கல்யாண முருங்கை இலைசாற்றை மோரில் கலந்து சாப்பிட்டால் சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் எரிச்சல் நீங்கும்.
 
கல்யாண முருங்கை இலைசாற்றில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் வயிற்று பூச்சிகள் தொந்தரவு கட்டுப்படும்.
 
பத்து இலைகளை நறுக்கி, 50 கிராம் சிறிய வெங்காயத்தையும் சிறிதாக நறுக்கி, நல்லெண்ணெய்யில் வதக்கி பிரசவமான தாய்மார்கள்  சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும்.
 
பெண்களுக்கு நாற்பது வயது நெருங்கும்போது இடுப்பு பகுதி பெருத்துப்போகும். அவர்கள் கல்யாண முருங்கை கீரையை உணவில் சேர்த்து  சாப்பிட்டால் இடுப்பு கொழுப்பு நீங்கி இடை மெலியும்.