1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மஞ்சள் காமாலை தாக்கமும் தீர்வுகளும்!

மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்து, கீழாநெல்லி. தினமும் பச்சையாக சில இலைகளை உணபதன் மூலம் மஞ்சள்  காமாலையை தடுக்கலாம், குணப்படுத்தலாம்.

 
வெயில் காலத்தில் ஆண்கள் சனி, புதன்கிழமையும், பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமையும் நல்லெண்ணெய் தேய்த்துக்  குளிப்பது உடல் உஷ்ணத்தை குறைக்கும், மஞ்சள் காமாலை வருவதை தடுக்கும்.
 
கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி, ஆவாரை, சோற்றுக் கற்றாழை இவற்றில் எது கிடைத்தாலும், அரைத்து உடலில் தேய்த்துக்  குளிப்பதால் சூடு குறைவதுடன், கல்லீரல் இயல்பாகச் செயல்பட ஏதுவாக இருக்கும்.
 
மசாலா கலந்த உணவு பொருட்களை வெயில் காலத்தில் தவிர்ப்பது நலம். நீர் சத்து மிக்க சௌசௌ, பூசணி, வெள்ளரி,  பீர்க்கங்காய் போன்றவற்றில் ஒன்றை மதிய உணவில் சேர்த்துக் கொள்வது வெயில் காலத்திற்கு மிக நல்லது.
 
வெயில் காலத்தில் மட்டுமல்ல எப்போதும் சீரகம் கலந்த தண்ணீரை குடிப்பது மிக நல்லது. மதியம் வேலைகளில் தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்த இரண்டு மாத காலத்துக்கு அதனை மாற்றி எலுமிச்சை சாறு அல்லது மோர் குடித்து  வரலாம்.
 
வயதான ரத்த சிவப்பணுக்கள் மண்ணீரலில் அழிக்கப்படும் போது பிலிரூபின் என்ற நிறப்பொருள் உடலில் உற்பத்தி ஆகிறது. இந்த பிலிரூபின் மலம், சிறுநீர் வழியாக வெளியேறுகிறது.
 
கல்லீரல் பாதிக்கப்பட்டாலோ, பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ கழிவுப்பொருளான பிலிரூபின் உடலிலேயே தங்கிவிடுகிறது. இதனால்தான் உடலில் மஞ்சள் நிறம் ஏற்படுகிறது. மது அருந்துவதாலும், ஹெபடைட்டிஸ் கிருமிகள்  கல்லீரலை தாக்குவதாலும் கூட மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.