1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 29 செப்டம்பர் 2022 (15:40 IST)

சாக்லேட் சாப்பிடுவதால் உடலுக்கு நன்மையை ஏற்படுத்துமா...?

சாக்லெட்டால் மனநிலையை மேம்படுத்த முடியும். ஏனெனில் மன அழுத்தத்தை குறைக்கும் செரடோனின் இதில் அதிகம் உள்ளது. சாக்லெட்டின் முக்கிய மூலப்பொருள் கொக்கோ தூள். இதில் குறைந்த கொழுப்பே உள்ளது. மேலும், சாக்லெட்டில் கொக்கோ 60 சதவீதத்திற்கு மேல் இருப்பதை தேர்ந்துதெடுத்து சாப்பிட வேண்டும்.


சாக்லெட் சாபிட்டால் சில காலத்திற்கு முதுமையை ஒத்தி வைக்கலாம். அதாவது சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும், வரிகளையும் சாக்லெட் குறைக்கின்றது. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது.

கருப்பு சாக்லெட்டில் அதிகப்படியான சாக்லெட் மூலப் பொருள் சேர்க்கப்பட்டிருக்கும். இனிப்பு குறைவாக கலந்திருக்கும்.  அளவுக்கு அதிகமாக சாக்லெட் உண்பதால் தலைவலி ஏற்படலாம். அதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் சாக்லெட் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

30 கிராம் கருப்பு சாக்லெட்டில் அதிகபட்சம் 10 மில்லிகிராம் காபின் ரசாயனப் பொருளும், பால் சாக்லெட்டில் 5 மில்லி கிராம் காபின் மூலப்பொருளும் உள்ளன. மூளைக்கு உகந்த செரோடானின், என்டார்பின் மூலப்பொருட்களும் சாக்லெட்டில் உள்ளன.

மனஅழுத்தம் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு ஆற்றலும் சாக்லெட் சாப்பிடுவதால் கிடைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. தினசரி குறைந்த அளவு சாக்லெட் உண்பதால் நோய் எதிர்ப்பாற்றலும், உடலுக்குத் தேவையான ஆற்றல்களும் கிடைப்பதாகவே தெரியவந்துள்ளது.

ஒரு நாளைக்கு 4 கிராம் சர்க்கரையும், 1 கரண்டி சாக்லெட் பவுடருமே குழந்தைகளுக்குப் போதுமானதாகும். எனவே தினமும் சுமார் 15 கிராம் அளவுடைய சாக்லெட் சாப்பிடுவதால் எந்த பிரச்சினையும் இல்லை.

அளவுக்கு அதிகமாக சாக்லெட் சாப்பிடுவதால் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. பல்சொத்தை, தலைவலி, உடல் பருமன், மூளை பாதிப்பு, நீரிழிவு போன்ற பல பிரச்சினைகள் ஏற்படும். எனவே அளவாக சாக்லெட் சாப்பிடுவதே நல்லது.