குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறதா வெள்ளரிக்காய் !!
வெள்ளரிக்காய்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் அவை குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும், குடலில் காணப்படும் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. வெள்ளரிக்காய் தினமும் சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
வெள்ளரிக்காயில் உள்ள கந்தகம் மற்றும் சிலிக்கான் முடியை வலுப்படுத்தவும், மென்மையாக்கவும் உதவுகிறது. மேலும் முடி மிருதுவாகவும், எளிதில் உடையாமல் இருக்கவும் உதவுகிறது. உடலில் போதிய அளவு நீர் மற்றும் நார்ச்சத்து இல்லாதது மலச்சிக்கலை ஏற்படுத்தலாம். உடலில் உள்ள நீர் மற்றும் நார்ச்சத்து குறைவை போக்க தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் மலச்சிக்கல் நீங்கி எளிதி மலம் வெளியேற உதவுகிறது.
வெள்ளரிக்காயில் உள்ள நீர்ச்சத்து உடலில் உள்ள நச்சுகளையும் வெளியேற்றுவதில் உதவுகிறது. மேலும் சிறுநீர்ப்பையில் இருக்கும் கற்கள் மற்றும் கழிவுகள் சிறுநீர் கழிப்பதன் மூலம் உடலில் இருந்து அகற்றப்படும். மற்றும் உடலின் யூரிக் அமில அளவைக் கட்டுப் படுத்துவதில் வெள்ளரிக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது.
வெள்ளரிக்காயை உணவில் சேர்த்து கொள்வது மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலை வலியை குறைப்பதாக சொல்லப்படுகிறது. வெள்ளரிக்காயில் உள்ள மெக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது மேலும் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஊக்கமளிக்கிறது.
ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற விரும்புபவர்கள் தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். இது தோல் சுருக்கங்களை நீக்கி சருமத்தை ஒளிரச் செய்கிறது.
வெள்ளரிக்காயில் ஆக்சிஜனேற்றிகளான ஃபிளாவனாய்டுகள், டானின்கள் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்ற சேர்மங்கள் உள்ளன. வெள்ளரிக் காய் சாப்பிடுவது ஈறுகள் மற்றும் பற்களில் காணப்படும் பாக்டீரியாவை நீக்குவதன் மூலம் வாய் துர்நாற்றத்தை போக்க உதவுகிறது.