செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அஜீரணம், நெஞ்செரிச்சலை குணமாக்கும் மோர் - இயற்கை மருத்துவம்

மோர் குடிப்பதால் என்ன நன்மை கிடைக்கும் என்று பலரும் அதன் நன்மை தெரியாமலேயே இதனை நல்லது என்று நினைத்து  வாங்கிக் குடிப்பார்கள். காரசாரமான உணவை உட்கொண்ட பின்னர் வயிறு எரிய ஆரம்பமாகும். அப்படி வயிறு எரியும் போது, ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வயிறு குளிர்ச்சியடையும்.


மோர் இதனை அமிர்தம் என்றே சொல்ல வேண்டும். அடிக்கடி நெஞ்செரிச்சலால் அவதியுறுபவர்கள் இதனை அன்றாட உணவில்  சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் இதில் இஞ்சி சாறு சேர்க்கும் பொழுது இது வயிற்றுக்குள் சிறந்த உணவு.
 
* காரசார உணவு சாப்பிட்டால் அதன்பின் ஒரு கிளாஸ் மோர் சாப்பிட்டால் உணவின் கடுமையினை நீக்கி விடும்.
 
* ஜீரணத்திற்கு அதிகம் உதவுவது. அதிக ஏப்பம் ஏற்படுவதினை தடுப்பது.
 
* கால்சியம் சத்து அளிப்பது நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 1000, 1200 மி.கி. கால்சியம் தேவைப்படுகின்றது. 1 கப் பாலில் 300 மி.கி.  கால்சியம் சத்து உள்ளது. 1 கப் தயிரில் 420 மி.கி. கால்சியம் உள்ளது. 1 கப் மோரில் 250 மி.கி. கால்சியம் உள்ளது.
 
* உணவு உண்டபின் மோர் குடிக்கும்பொழுது நெய், வெண்ணெய், ஆலிவ் எண்ணெய் இவற்றினை உணவு குழாயில் இருந்து  கழுவி எடுத்து விடுகின்றது.
 
* பொட்டாசியம், வைட்டமின் ’பி’ சத்து, மற்ற வைட்டமின்கள் தாது உப்புகள் கொண்டது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியினை  கூடுகின்றது. தூக்கம் நன்கு வரும். ஹார்மோன்கள் சீராக வேலை செய்யும்.
 
* கொழுப்பினை குறைக்கின்றது. இரத்த அழுத்தம் சீராய் இருக்க உதவுகின்றது.
 
* புற்று நோயை தவிர்க்கின்றது. உடலில் நீர் வற்றாமல் இருக்கச் செய்கின்றது.
 
* லக்டோஸ் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு மோர் மிகவும் சிறந்தது. அதிக கொழுப்பில்லாத பாலில் தயாரிக்கப்பட்ட தயிரில்  உப்பு சேர்க்காமல் மோர் தயாரித்து அருந்துவது மிகவும் சிறந்தது.