திங்கள், 9 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சோயாபீன்ஸில் உள்ள மருத்துவ நன்மைகளும் பயன்களும்...!!

சோயாபீன்ஸை வாரம் ஒரு முறை சாப்பிட்டால் எண்ணற்ற நன்மைகள் உண்டாகும். சோயாபீன், புரதங்களின் உயர்ந்த உள்ளடக்கத்தை கொண்டுள்ளது. இதனை இறைச்சி புரதத்திற்கு பதிலாக எடுத்துக்கொள்ளலாம்.
இறைச்சியைப் போலவே, சோயாபீனும் கொழுப்பு நிறைந்திருக்கும். ஆனால் இறைச்சி போலல்லாமல், அது நிறைவுறா கொழுப்பு நிறைந்ததாக இருக்கிறது. ஊட்டச்சத்து அளவுகள்: புரதங்கள், ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் ஆகியவற்றின் மிகச் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.
 
சோயாபீன் கொலஸ்டிரால் அளவைக் குறைப்பதன் மூலம் ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க உதவுகிறது. கார்டியோவாஸ்குலர் கோளாறுகளை தடுப்பதில் சோயா புரதத்தின் பதில் இன்னமும் விவாதத்தின் தலைப்பாக அமைகிறது.
 
சோயாபீன் மற்றும் அதன் தயாரிப்புகள் புற்றுநோய்க்கான தடுப்பிற்கு மிகவும் ஊக்கமளிக்கின்றன. ஐசோபிளவோன் என்பது பைடோ-ஈஸ்ட்ரோஜனின் ஒரு வகை. இது சோயா-புரதத்தில் உள்ளது. புற்றுநோய் தடுப்புக்கு ஐசோபிளவோன் மிகவும் உதவியாக இருக்கும்  என்று நம்பப்படுகிறது.
 
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கூட பெருங்குடல் புற்றுநோய் ஆபத்துக்களை குறைப்பதற்காக பயன்படுகிறது. கரையக்கூடிய நார்ச்சத்து, சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு அமைப்பை அதிகரிக்க  உதவுகிறது.
 
சோயா நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, உடல் எடையைக் குறைக்க, மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவக் கூடியவை ஆகும். மேலும் சோயாபீன் செரிமான சக்தியை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. சோயாபீன்களை  பச்சையாக உண்பது நச்சுத்தன்மை அளிக்கக் கூடியதாகும். எனவே சாப்பிடும் முன்பாக, அவை முறையாக சமைக்கப்பட வேண்டும்.