1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

சித்த மருத்துவத்தில் நிலவேம்பின் பயன்பாடு...!

சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நிலவேம்பின் பயன்பாடு அதிகம். அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கஷாயத்தை தினமும் இருவேளை  அருந்தி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறையும். தும்மல், இருமல் போன்றவை ஏற்படாது.
காய்ச்சல் குறைய
 
நிலவேம்பு 15 கிராம், கிச்சிலித் தோல் 5 கிராம், கொத்துமல்லி 5 கிராம் இவற்றை ஒன்றாகச் சேர்த்து 2 டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து அப்படியே மூடி  வைத்து 1 மணி நேரம் கழித்து பின் வடிகட்டி நாள் ஒன்றுக்கு 30 மி.லி. என தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் ஜூரக் காய்ச்சல் நீங்கும்.
 
குழந்தைகளுக்கு
 
வயிற்றுப் பொருமல் அல்லது கழிச்சல் உள்ள குழந்தைகளுக்கு நிலவேம்பின் இலையை சாறெடுத்து கொதிக்க வைத்து ஆறிய பின் 5 மி.லி கொடுத்து வந்தால்  வயிற்றுப் பொருமல் நீங்கும்.
அஜீரணக் கோளாறுகள் நீங்க
 
நில வேம்பு சமூலம் (காய்ந்தது) 16 கிராம், வசம்புத் தூள் 4 கிராம், சதக்குப்பை விதைத் தூள் 4 கிராம், கோரைக் கிழங்கு தூள் 17 கிராம் இவற்றை ஒன்றாகச்  சேர்த்து 1 டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து அதை ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்து வடிகட்டி தினமும் 2 அல்லது மூன்று வேளை அருந்திவந்தால் உடல்  வலுப்பெறும். அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
 
தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும். மேலும் பெண்களுக்கு உண்டான சூதகக் கட்டி, கர்ப்பக் கட்டி, தேவையற்ற நீர் போன்றவற்றை நீக்கும்.