இந்த மூன்று பொருட்கள் இருந்தால் பல்வேறு நோய்களை நெருங்க விடாது...!
நம் முன்னோர் உணவின் மூலமாகவே பல்வேறு நோய்களைக் குணப்படுத்தி வந்தார்கள். நோய்கள் வராமலும் தடுத்தும் மருத்துவர் செந்தில் கருணாகரன்வந்திருக்கிறார்கள். இதனால்தான் திடகாத்திரமான உடல்வாகுடன் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்கள்.
வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் இவை மூன்றும் மருத்துவக் குணம் கொண்ட உணவுப் பொருள்கள். வெந்தயத்தில் அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. இது பித்தத்தைக் குறைக்கும். கருஞ்சீரகம் கபத்தைக் குறைக்கும். அதேபோல் ஓமம் செரிமானத்தன்மையை மேம்படுத்தும்.
தினமும் இதனை நாம் உட்கொண்டால் பல்வேறு நோய்களை நெருங்க விடாமல் தடுத்துவிடமுடியும். ஏனெனில் பெரும்பாலான நோய்களுமே வயிற்றில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன. மந்தம், ஜுரம், கொழுப்பு ஆகிய அனைத்தும் ஏற்படுவதற்கான காரணம் செரிமானக் கோளாறுகள்.
வெந்தயம், ஹார்மோனைக் கட்டுப்படுத்தும், அதனால், உடல் மினுமினுப்பு உண்டாகும். மேலும், ஓமம் மற்றும் கருஞ்சீரகம் உடலுக்கு சுறுசுறுப்பைத் தரும். உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் இரும்புச்சத்துகளை இந்த மருந்துகள் கொண்டிருப்பதால் எழும்புகள் மற்றும் பற்கள் உறுதியடையும்.
வெந்தயம் கூந்தல் வளர்ச்சிக்கு இது துணைபுரியும். மலச்சிக்கல், மாதவிடாய் பிரச்னைகளையும் சரி செய்யும். மேலும் சளியால் காது அடைக்கப்பட்டு கேட்கும் திறன் குறைவாக இருந்தால் அதைச்சரி செய்யும்.