1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இயற்கையான முறையில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி....?

மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் நுரையீரலில் நச்சுக்கள் அதிகம் சேர்ந்து, மூச்சுகுழாயினுள் அழற்சி ஏற்பட்டு, சுவாசிப்பதில் பிரச்சனையை ஏற்படுத்துகின்றன. இப்படி நுரையீரலில் சேரும் நச்சுக்களை உணவுகள் மூலம் நீக்கலாம். 
ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்களுக்கு அவகேடோ பழம் மிகவும் சிறந்த ஒன்று. இதில் உள்ள குளுதாதையோன் ப்ரீ-ராடிக்கல்களால்  நுரையீரல் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் மற்றும் மாசுப்படுத்தி பொருட்களை நுரையீரலில் இருந்து வெளியேற்றும்.
 
தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து தடுப்பதாக ஆய்வில்  கண்டறியப்பட்டுள்ளது. எனவே சுவாச பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழத்தை உட்கொள்வது நல்லது.
 
பசலைக்கீரையை அதிகமாக உட்கொண்டு வந்தால், ஆஸ்துமா தாக்கும் அபாயம் குறையும். ஏனெனில் பசலைக்கீரையில் வைட்டமின் சி,  பீட்டா-கரோட்டீன், வைட்டமின் ஈ மற்றும் மக்னீசியம் போன்ற ஆஸ்துமாவை எதிர்த்துப் போராடும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
மஞ்சளில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள் சுவாச பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பளிக்கும். எனவே அன்றாட உணவில் மஞ்சளை அதிகம் சேர்த்து வாருங்கள். அதிலும் தினமும் காலையில் ஒரு டம்ளர் நீரில் மஞ்சள் தூளை சேர்த்து குடித்து வந்தால், நுரையீரல்  மட்டுமின்றி, உடலும் சுத்தமாகும்.
 
ஆப்பிளில் உள்ள சக்தி வாய்ந்த உட்பொருள் ஆஸ்துமாவை எதிர்த்துப் போராடி நல்ல பாதுகாப்பை வழங்கும். இதற்கு அதில் உள்ள அதிகப்படியான சக்தி வாய்ந்த ப்ளேவோனாய்டுகள் தான் காரணமாக ஆய்வுகள் கூறுகின்றன.