வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கண்களை சுற்றியிருக்கும் கருவளையத்தை எளிதில் போக்கிடலாம்

கண்களை சுற்றியிருக்கும் கருவளையத்தை எளிதில் போக்கிடலாம்

பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். இந்த கருவளையம் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மட்டும் வருவதில்லை, அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன.


 


இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது.
 
பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாமல் இருக்க, வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே சிறந்தது. இப்போது அந்த கருவளைத்தை போக்குவதற்கான இயற்கைப் பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.
 
* உருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை, காட்டனில் நனைத்து, அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.
 
* எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.
 
* தக்காளி ஜூஸை ஒரு நாளைக்கு இரண்டு முறை, சிறிது புதினா மற்றும் உப்பை சேர்த்து கலந்து குடித்து வந்தால், கருவளையங்கள் நாளடைவில் நீங்கிவிடும்.
 
* பாதாமை சிறிது பாலுடன் சேர்த்து, பேஸ்ட் போல் செய்து, கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருமையான வளையம் போய்விடும்.
 
* ஒரு டீஸ்பூன் அன்னாசிப் பழச்சாற்றுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தினமும் தடவி வந்தால், கருவளையங்கள் நீங்கி, முகம் நன்கு பொலிவோடு காணப்படும்.
 
* தினமும் படுக்கும் முன்பு, வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த க்ரீம்களை தடவி வந்தால், கருவளையம் போய்விடும்.
 
* புதினா இலையை பேஸ்ட் செய்து , அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால், கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். கண்களில் கருவளையம் வருவதற்கு கண்கள் களைப்புடன் இருப்பதும் ஒரு காரணம். ஆகவே இந்த முறை கண்களை புத்துணர்ச்சியாக்கும்.