வியாழன், 28 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட செம்பருத்தி பூ !!

செம்பருத்தி பூவில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.

தேங்காய் எண்ணெயில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும். வீடுகளில்  வளர்க்கக்கூடிய ஒரு செடி வகை செம்பருத்தி. இது, பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாகும்.
 
செம்பருத்தி பூவின் சாற்றை, சம அளவு தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த  எண்ணெயை தினமும் தலையில் தடவி வர முடி கருத்து அடர்த்தியாக வளரும்.
 
உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அவர்கள் தினம் 10 பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் புண்கள் ஆறும். ஒரு மாதகாலம் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.
 
செம்பருத்தி பூ குளிர்ச்சியானது. சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளக்க செய்யும். பூக்களை அரைத்து தலையில் தடவி  ஊற வைத்து குளித்தால் பேன்கள் குறையும்.
 
10 பூக்களின் இதழ்களை நீரில் இட்டு காய்ச்சி குடித்து வர சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும். உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை  உண்டாக்கும்.
 
கருப்பை நோய்கள், இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணி செம்பருத்தி பூக்கள். பூவிதழ்களை 200 மி.லி நீரில் கொதிக்க வைத்து,  காலை நேரத்தில் அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் சீராகும்.
 
செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டை தூள் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட ரத்தத்தில் இரும்பு சத்து அதிகரித்து ரத்த  சோகை நோய் குறையும்.