வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும் கரும்பு சாறு...!!

கரும்பு சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இரும்பு, மக்னீசியம், கால்சியம் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்திருக்கும். எனவே இது நீரிழப்புக்கு நல்லது. இது பொதுவான சளி மற்றும் பல தொற்று நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
சிறுநீரக தொற்றுகள் சிறுநீரகக் குழாய் தொற்றுக்கள், சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை உறுதி செய்வதற்கு  உதவுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை எலுமிச்சை மற்றும் தேங்காய்த் தண்ணீரில் கலந்த கரும்பு சாறு எடுத்துக் கொள்ளுங்கள். 
உடலில் இருந்து நச்சுக்களை நீக்குகிறது கரும்பு சாறு தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி, உடலை தூய்மைப் படுத்துவதில் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்குவதால் படிப்படியாக உங்கள் உடல் எடை குறைய வழிவகுக்கிறது.
 
செரிமான பிரச்சனை மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கைக்கு நீங்கள் தினமும் கரும்பு சாறு உட்கொள்ள வேண்டும். கரும்பு சாற்றில் உள்ள பொட்டாசியம் உங்கள் வயிற்றின் அளவுகளை சமன்செய்ய உதவுகிறது.
 
வாய் துர்நாற்றம் மற்றும் பல் சிதைவு வாய் துர்நாற்றம் இருப்பது சமூகத்தில் நம்மை தாழ்த்தி விடுகிறது. உங்களுக்கு வாய் துர்நாற்றம் அதிகம் இருக்கும் பட்சத்தில், நீங்கள் கரும்பு சாற்றை ஒரு தீர்வு தரும் பானமாக கருதி கொள்ள வேண்டும். 
 
கரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமங்களை கொண்டிருக்கிறது, இது உங்கள் பற்களின் பற்சிப்பியை உருவாக்க உதவுகிறது. மேலும் இது பற்சிதைவை தடுத்து உங்கள் பற்கள் வலுவடைய உதவுகிறது. ஈறுகளுக்கு வலிமை அளிக்கிறது. உடலில் உள்ள நீர்ச்சத்தை  குறையாமல் தடுக்கிறது.